மட்டக்களப்பு மாவட்டத்தின் 14, பிரதேச அபிவிருத்தி குழுக்களுக்கும் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர் மக்கள் விடுதலை முன்னணியின்மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்படுகிறார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்படவில்லை. 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு 14,856 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் சார்பாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு வேட்பாளர் இவர் ஆவார்.