இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான 2023ம் ஆண்டுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் நிகழ்வு இன்று (21-12-2024) கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகாமம் இந்து கலா மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்கள் வில்லுப்பாட்டு போட்டியில் முதலாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.