பதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் அம்மணி, SLEAS-I விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்று, கல்வி அமைச்சின் கீழுள்ள கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்றுச் சென்றமையினால் ஏற்பட்ட, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி வெற்றிடத்திற்கு, அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி S.R.ஹசந்தி அம்மையார், சேவை மூப்பு அடிப்படையில் பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளராக (Cover Up Duty) கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை தனது கடைமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாணசபை வரலாற்றில் முதல் முதலில் நியமிக்கப்பட்ட சிங்களமொழி பேசும் பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி S.R.ஹசந்தி அம்மையார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிரந்தர கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அம்மணி, அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளர் பதவிக்கு மேலதிகமாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் பதவியையும் வகிப்பார்.