தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழு பேச்சாளாராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இருந்தால் அவர் கட்சி பேச்சாளராகவும் செயல்படலாம்,
ஆனால் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் பாராளுமன்ற குழு பேச்சாளராக இருந்தால் அவர் தமிழரசுகட்சி பேச்சாளராக செயல்படகூடாது.
இதுதான் நேற்று(28-12-2024) வவுனியா மத்தியகுழுவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சி. வி கே சிவஞானம், சுமந்திரன், சயந்தன், குலநாயகம் ஆகியோர் எடுத்த முடிவுகளாக கருதவேண்டியுள்ளது.
மட்டக்களப்பு எம் பி ஶ்ரீநேசன் பாராளுமன்ற குழுவாக நியமித்தால் அவர் தமிழரசு கட்சி பேச்சாளராக செயல்படக்கூடாதுஎன்பதே என யாழ்ப்பாணத்தை சேர்ந்த சி வி கே சிவஞானம் சுமந்திரன் சிந்தனையாக இருந்துள்ளது.
இது ஒருவேளை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் தொடர்ந்தும் தமிழரசுகட்சி பேச்சாளராகவே தொடர்ந்திருப்பார் இந்த பிரதேசவாதம் யாழ்ப்பாண மக்களிடம் இல்லை ஆனால் தமிழரசுக்கட்சிக்குள் உள்ளது. கடந்த 2024, ஜனவரி 27, ம் திகதி திருகோணமலை பொதுச்சபை கூட்டத்திற்கு முன்பு இடம்பெற்ற பொதுச்செயலாளர் தெரிவிலும் ஶ்ரீநேசனை பொதுச்செயலாளர் பதவிக்கு அரியநேந்திரன் முன்மொழிந்த போதும் அந்த பதவியை தனக்கு தரவேண்டும் என சுமந்திரன் கேட்டு குழப்பியதற்கும் பிரதான காரணம் ஶ்ரீநேசன் மட்டக்களப்பான் என்ற ஒரே காரணம்தான் அதுதான் இன்றய (28) மத்தியகுழுக்கூட்மத்திலும் இடம் பெற்றுள்ளது.
மத்தியகுழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்களும் இந்த யாழப்பாண பிரதேச வாத அரசியலுக்கு துணை போய் உள்ளனர் எவருமே எதிர்க்கவில்லை.
இந்த சம்பவம் கடந்த 2004, ல் கருணா கூறியதை மீண்டும் உறுதிப்படுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் யாழ்ப்பாண தமிழ்மக்கள் இதற்கு உடந்தைகள் இல்லை தமிழரசுகட்சியில் உள்ளவர்களிடம் இப்போதும் பிரதேசவாதம் புறக்கணிப்புகள் தொடர்வதை இந்த சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது.
அன்று முதல் இன்று வரை தமிழரசு கட்சிக்குள் யாழ்ப்பாண மேட்டு குடி பிரதேசவாதம் இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
மீண்டும் ஒரு தடவை வெளிப்படையாக பிரதேசவாதம் வெளிவந்து உள்ளது.
எதிர்வரும் தேர்தல்களில் அதன் தாக்கம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரியவரலாம்.
யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் இல்லை மட்டக்களப்பு.
இது தமிழரசு தகவல் மையத்தில் பூபால் ராஜ் என்பவரின் பதிவு..!