திருகோணமலை குவாட்லூப் தேவாலயத்திற்கு பின்புறமாகவுள்ள கடற்கரைப் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (31-12-2024) காலை கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த நபர் கலவத்த தன்கொட்டுவ பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் தெரிய வருகின்றது.
குறித்த சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.