திருகோணமலை நிலாவெளியிலிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த சிறியரக லொறி இன்று (03-12-2024)ஆம் திகதி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணித்த சந்தர்ப்பத்தில் சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தின்போது லொறியில் பயணித்தோருக்கு சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளதுடன் விபத்தின் போது லொறிக்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.