உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்காக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (03-12-2024) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
அனைத்து வாக்காளர்களின் உரிமை
இதேபோல், புதிய வேட்புமனுக்களை அழைக்க அனுமதிக்கும் வகையில் உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டு்ள்ளார்.
மேலும், அனைத்து வாக்காளர்களின் உரிமையையும், தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் இளைஞர் சமூகத்தின் உரிமையையும் பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.