சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்காக காத்திருந்தவர்கள் நான்கு பேர் கைது!




தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்காக காத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது பெருந்தொகை டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையை சேர்ந்த சின்னத் தம்பி, முகமது பைசர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அவர்களின் பயண பொதியில் பெருந்தொகை அமெரிக்க டொலர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சட்டவிரோதமான முறையிலான பெறப்பட்ட பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் ஊடாக பணத்தை கைமாற்றும் நோக்கில் இந்த கும்பல் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



சுங்க அதிகாரிகள்

குறித்த நான்கு பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கபூர் செல்லும் பயணியிடம் டொலரை கையளிக்கும் நோக்கில் செல்லவிருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இடைத்தரகர்களாக செயற்படும் இவ்வாறான நபர்களுக்கு பயண அடிப்படையில் மோசடியாளர்களால் பணம் வழங்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை