மட்டக்களப்பு இலுப்படிச்சேனை பிரதான வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்றின் மீதே, அடையாளம் தெரியாத நபரொருவரினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அருகில் இருந்த கடையின் சிசிரிவி கமராவில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த தாக்குதலின் போது வர்த்தக நிலையம் முற்றாக தீயில் எரிந்துள்ளதுடன், விற்பனை நிலையத்தில் இருந்த உபகரணங்களும் தீயில் கருகி உள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.