மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையில் 01-08-1996ஆம் திகதி தொடக்கம் வேலைத்தொழிலாளியாக கடமை புரிந்து (27-12-2024 )ஆம் திகதியுடன் தனது 28 வருடத்திற்கும் மேற்பட்ட கால சேவையுடன் ஓய்வு பெறும் திரு. முருகேசு யோகேஸ்வரன் (வேலைத்தொழிலாளி) அவர்களின் பிரியாவிடை வைபவம் நேற்று (26) போரதீவுப்பற்று பிரதேசசபை ஒன்றுகூடல் மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு சபையின் செயலாளர் திரு. எஸ். பகீரதன் தலைமையில் நடைபெற்றது.
இன்றைய நிகழ்வில் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அவரது சேவையை பாராட்டி பேசி பரிசில்களும் வழங்கி கௌரவித்தமை சிறப்பம்சமாகும்.