மட்டக்களப்பு செட்டிபாளையம் பகுதியில் இன்று (17-12-2024)காலை நோயாளர் காவு வண்டியும் பேரூந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து பற்றி மேலும் தெரிய வருவதாவது....
மட்டக்களப்பு கல்முனை சாலைவழித்தடத்தில் மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்ககு சொந்தமான பேரூந்து பழுதடைந்து செட்டிபாளையம் மகாவித்தியாலயத்திற்கு அருகில் பிரதானவீதியோரம் திருத்த வேலைகளுக்காக தரித்திருந்த வேளை மட்டக்களப்புசுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை நோக்கி பயணித்த நோயாளர் காவு வண்டி பேரூந்தின் பின் பகுதியில் மோதியே இந்த விபத்து சம்பவித்திருக்கிறது.
இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டியில் பயணித்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.