கேரளா கஞ்சாவுடன் 55 வயது நபர் கைது!



மன்னம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செவனபிட்டியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் அதே பிரதேசத்தைச்சேர்ந்த 55 வயது சந்தேக நபர் நேற்று (25-01-2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மன்னம்பிட்டி பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைக்காக மன்னம்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த மன்னம்பிட்டி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை