இன்று (14-01-2025) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் DS சேனநாயக்க சமுத்திரத்தில் இருந்து மேலதிக நீர் வெளியேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மல்கம்பிட்டி பிரதேசம் உட்பட கல்லோயா ஆற்றினை அண்மித்துள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படிகேட்டுக்கொள்வதோடு,
தொழில்நிமித்தம் வயல் வேலை, செங்கல் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு உட்பட ஏனைய சகல தொழில் நடவடிக்கைகளுக்காக செல்பவர்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறும் கேட்கப்படுகின்றீர்கள்.
பிரதேச செயலாளர்,
பிரதேச செயலகம்,
சம்மாந்துறை.