மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு!



மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசெயலகமும் கதிரவன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடாத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம், நேற்று (08-01-2025) ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேச கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.





அகிலன் பவுண்டேசனின் அனுரணையுடன் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன், போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மற்றும் இலங்கைக்கான அகிலன் பவுண்டேசன் பணிப்பாளரும் போரதீவுப்பற்று பிரதேச மரணவிசாரனை அதிகாரியுமான கலாநிதி வீ.ஆர்.மகேந்திரன் JP ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாற்றுத் திறனாளிகளால் கவிதை, நாடகம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளை கௌரவித்து அவர்களின் தேவைகருதி போர்வை நுளம்பு வலை வாழ்வாதாரத்திற்கான உதவி பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



புதியது பழையவை