மட்டக்களப்பு திருப்பழுகாமம் விபுலாநந்த வித்தியாலயத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!




கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக 2025ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நேற்று(30-01-2025)ஆம் திகதி  நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நடைபெற்றது.

இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/திருப்பழுகாமம்  விபுலாநந்த வித்தியாலத்தில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் இடம்பெற்றன. 




இதற்கமைவாக  முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திரு.சி.பிரதீபன்  தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் தரம் 02 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு வருகை தந்த புதிய மாணவர்களை இன் முகத்தோடு வரவேற்றதுடன் மாணவர்களின் வரவேற்பும் கலை நிகழ்வுகளும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்தின் இப் பாடசாலையின்  இணைப்பாளர்  திருமதி றீற்றா - கலைச்செல்வன் பாடசாலை பழைய மாணவர்சங்கம்,பாடசாலையின் அபிவிருத்திச்சங்கத்தின்  செயலாளர் , ஆசிரியர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


புதியது பழையவை