மட்டக்களப்பின் நகரை அண்டிய பிரதேசங்களிலிருந்து நகர பாடசாலைகளுக்கு கல்வி நடவடிக்கைகளுக்கு வரும் மாணவிகளின் நன்மை கருதி அருவி பெண்கள் அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் இலங்கை போக்கு வரத்துச் சபையின் மட்டக்களப்பு கிளையினரால் விசேட பஸ் சேவை இன்று இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலை முகாமையாளர் கந்தசாமி சிறிதரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் பஸ் சேவை பாடசாலை நாட்களில் காலை 6.15 க்கு சத்துருக்கொண்டானில் இருந்து இயக்கப்பட்டு மட்டக்களப்பு நகர் வரை பயணிக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள.....
📞 கந்தசாமி ஸ்ரீதரன் - 0771058230 (இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலை முகாமையாளர்)