மட்டக்களப்பு வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது!



இலங்கையின் காகித  உற்பத்திக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக மட்டக்களப்பு - வாழைச்சேனை காகித ஆலை மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.


சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், காகித ஆலையில் செயலிழந்த இயந்திரங்கள் பழுதுபார்க்கப்பட்டதன் பின்னர் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் ஹந்துநெத்தி தெரிவித்தார்.


வாழைச்சேனை தொழிற்சாலையின் இயந்திரங்கள் 1956 இல் இறக்குமதி செய்யப்பட்டதால், பழுதுபார்ப்பதற்கு சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து இயந்திரங்களை பழுதுபார்த்தால் ஒரு நாளைக்கு 5 டன் உற்பத்தி செய்வதன் மூலம் மாதத்திற்கு 22 மில்லியன் ரூபாய் லாபம் ஈட்டலாம் எனவும் குழு சுட்டிக்காட்டியுள்ளார்.

புதியது பழையவை