நவகிரி குளத்தின் வான்கதவுகள் திறப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!



மட்டக்களப்பில் தொடர்ந்து மழைபெய்து வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளமான நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் நேற்று (11-01-2025)ஆம் திகதி 2.5 அடி திறக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் பெய்துவரும் அடை மழை காரணமாக இன்று(12-01-2025)ஆம் திகதி பி.ப 2.30மணிக்கு மீன்டும் 2 வான்கதவுகளும் 4அடி திறக்கப்பட்டது.

எனவே, குறித்த நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், நீர்த்தேக்கங்களுக்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன
புதியது பழையவை