மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொளிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய அரிசி பொதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் வாழைச்சேனை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத அரிசியை எதிர்வரும் (23.01.2025)ம் திகதி நீதிமன்ற நடவடிக்கைக்குட்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.