உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஏப்ரல் 14ஆம் திகதி புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கூறுகிறார்.
340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியிருப்பதால், அதற்கு 8 முதல் 10 பில்லியன் ரூபா வரை தேவைப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு மதிப்பிட்டுள்ளதாக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
340 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் பத்திரங்கள் அச்சிட வேண்டியுள்ளதாகவும், இது 'அதிக வேலை' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்குத் தேவையான சில ஆவணங்களை அச்சிடுவதை ஆரம்பிக்கும் நோக்கில் ஆணைக்குழு ஏற்கனவே அரசாங்க அச்சகத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.