அம்பாறையில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் - ஆறு பேர் கைது!





சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் அம்பாறையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றிருந்த ஊடகவியலாளர் அச்சல உபேந்திர(50) மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவரது உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

தாக்குதல் காரணமாக அச்சல உபேந்திர அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றார்.

சம்பவத்தின் சூத்திரதாரிகள்
இந்நிலையில், அவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதியது பழையவை