சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் திருடப்பட்ட "Hero Passan Pro" மோட்டார் சைக்கிள்
பொத்துவில் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுடன் சந்தேக நபரையும் சம்மாந்துறை பொலிஸார் நேற்றிரவு (16-01-2025) கைது செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டலின் கீழ் பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான குழுவினரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் விசாரணைகள் மூலம் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரும், திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொத்துவில் பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டதுடன், சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் கல்முனைக்குடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.