கிழக்கு மாகாண ஆணையாளராக பதவி உயர்வு பெற்ற அஸ்மிக்கு கெளரவம்!



கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் மாகாண ஆணையாளராக அன்மையில் பதவி உயர்வு பெற்ற பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை (SLAS - I) அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மியை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று(20-01-2025) பொத்துவில் Blueway ஹோட்டலில் இடம்பெற்றது.

குறித்த பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில், அதன் தலைவர் தொழிலதிபர் எம்.எஸ்.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் உதவி தவிசாளரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான  ஏ.பதூர்க்கான், மெளலவி கே.அப்துல் அஸீஸ் (ஷர்க்கி), சமூக செயற்பாட்டாளர் ஏ.நசுவுதீன், பள்ளிவாயல் பொருளாளர் இம்ரான் மூசா, ஓய்வு பெற்ற அதிபர் என்.கே.அப்துல் அஸிஸ், பள்ளிவாசல் உபதலைவர் எம்.ஏ.எல்.ஜௌபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது பதவி உயர்வு பெற்ற கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் மாகாண ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை