மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் காட்டு யானை உயிரிழந்துள்ளது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வயல் பிரதேசத்தை அண்டிய வாய்க்கால் ஒன்றில் காட்டு யானை இன்று (16-01-2025) உயிரிழந்துள்ளது.
இந்த யானையின் இறப்பு தொடர்பில் வெல்லாவெளி, பட்டிப்பளை பிரதேச வனவிலங்கு திணைக்க உத்தியோகத்தர்கள், கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.