வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்!



வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இன்று (30-01-2025) ஆம் திகதி காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியின் முன்றலில் கூடிய பட்டதாரிகள் சங்கத்தினர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

இதன்போது பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகளும் விநியோகிக்கப்பட்டது.



இதன் பொழுது வேலை வேண்டும் வேலை வேண்டும் பட்டதாரிகளுக்கு வேலை வேண்டும் ,படித்தும் பரதேசிகளாக இன்றும் தொடரும் அவலம் ,பல பரீட்சைகளை தொடர்ந்து என்ன பிரியோசனம் என்றவாறு பல கோஷங்களை எழுப்பிய வண்ணம் உலகத் தழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் இருந்து யாழ் நகரினூடாக மாவட்ட செயலகத்திற்கு சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தமை தொடர்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவரை இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை பொலிஸாரால் கையளிக்கப்பட்டது. 

அதன் பின்னர் நண்பகளுடன் போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.
புதியது பழையவை