மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சைக்கொடி சுவாமிமலை எனும் இடத்தில் மின்சாரம் தாக்கி 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை மயிலிப்போடி என அடையாளங்காணப்பட்டுள்ளது.
தான் குடியிருக்கும் வளவில் இணைக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்கியே குறித்த குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் மரணம் மீதான விசாரணையினை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரியும் மேற்கொண்டிருந்த நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவில் கடந்த 3 நாட்களில் மின்சாரம் தாக்கி இரண்டு குடும்பஸ்தர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.