சூடானில் இராணுவ விமானம் விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 46 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
சூடானின் ஓம்துர்மான் (Omdurman) நகருக்கு கிழக்கே உள்ள வாடி சாயிட்னா (Wadi Sayidna) ஏர் பேஸில் இருந்து ஆன்டோனோவ் ஏர்கிராப்ட் நேற்று (25-02-2025) டேக் ஆப் செய்யப்பட்டு வானில் பறந்துகொண்டிருந்தது.
ஓம்துர்மானில் உள்ள கராரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு ஒன்றின் மேல் விமானமானது மோதி வெடித்து
விபத்துக்குள்ளானது.
மேலதிக விபரங்களை விரைவில் எதிர்பாருங்கள்..