யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க , நேற்று(31-01-2025)மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினார் மாவை சேனாதிராசா (29-01-2025) புதன்கிழமை காலமானார்.
அதன்படி அவரது புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி நேரில் சென்று மாவை சேனாதிராசாவின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் நாளை (02-02-2025)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.