மட்டக்களப்பு சுகாதார சேவைகள் குறித்த கருத்துக்களை தெரிவிக்க மக்களுக்கு நேரடி வாய்ப்பு!



மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த கருத்துக்களை வழங்குவதற்கு புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் சார்ந்த ஆலோசனைகளையும் முறைப்பாடுகளையும் மக்கள் நேரடியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு (RDHS) தெரிவிக்க முடியும்.

அத்தோடு, மக்கள் தங்களின் ஆலோசனைகள் மற்றும் முறைப்பாடுகளை, புகைப்படங்கள், காணொளிகள், குரல் பதிவுகள் அல்லது எழுத்து மூலமாகவோ தெரியப்படுத்தலாம்.


மேற்படி, விடயங்களை 070 571 1151 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்க முடியும்.


இந்த நிலையில், குறித்த திட்டமானது, மக்களுடனான புதிய அணுகுமுறைகளை உருவாக்கவும், சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் பாரிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதியது பழையவை