மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் -இராணுவமும் இணைவு


மட்டக்களப்பு திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

"மகிழ்ச்சி மிக்க பாடசாலை" என்ற கருப் பொருளை முதன்மையாகக் கொண்டு “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில் பாடசாலையில் தூய்மை செய்யும் முதல் கட்ட பணியானது திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் நேற்று(21-02-2025)ஆம் திகதி பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம் பெற்றன.

"Clean Sri Lanka” வேலைத்திட்டத்தில்
போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ். பகீரதன்,போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் V.துலாஞ்சனன், 243ஆவது படைப்பிரிவின் லெப்ரினல் கேணல் குமார, 11th Battalion Sri Lanka Sinha Regiment  கட்டளை அதிகாரி மேஜர் ரணில் வலகல்ல, ஆலய குரு,பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.




பாடசாலையை இலங்கை  இராணுவ வீரர்களால் துப்பரவுகளை செய்து மிக அழகு படுத்திருந்தார்கள்.

இதன் போது இராணுவ வீரர்களுக்கான தாகசாந்தியை பழுகாமம் "விறிலியன்ற்"(Palugamam Brilliant Sc)  விளையாட்டுக்கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







புதியது பழையவை