மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக கலாசார பொங்கல் விழாவானது இன்று(02-02-2025)ஆம் திகதி பிரதேசசெயலாளர் சோ. ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றனர்.
போரதீவுப்பற்று பிரதேச கலாசார உத்தியோகஸ்தர் சு.ருபேசன் அவர்களின் ஏற்பாட்டிலே சங்கபுரத்தின் ஆலய நிர்வாகங்கள், அறநெறி பாடசாலைகள், கிராம மட்ட அமைப்புக்களது பங்குபற்றுதலுடன் 13ஆம் கிராமம் சங்கபுர பொது விளையாட்டு மைதான முன்றலிலே சிறப்பாக இடம்பெற்றது.
கலாசார விழுமியங்களுடன் அறுவடை செய்த நெற் கதிர்கள் பவனியாக கொண்டுவரப்பட்ட நெற்கதிர்கள் சமய வழிபாடுகளுடன் பாரம்பரிய முறையில் உப்பட்டி அடித்து பொலிதூற்றப்பட்டு பின்னர் நெல் குற்றப்பட்டு பொங்கல் பானையில் புத்தரிசியிடப்பட்டன
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார், கணக்காளர் தி.அம்பிகாபதி, நிருவாக உத்தியோகத்தர் தி.உமாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ.ஜெயராஜா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் அ.குககுமாரன், போரதீவுப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.