மட்டக்களப்பு தும்பங்கேணியில் பிரதான நீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு வழமைக்கு திரும்பியது!



போரதீவுப்பற்று பிரதேசசபையின் கீழ் இயங்கும் தும்பங்கேணி நீர் வழங்கல் திட்டத்தின் பிரதான நீர் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டு நேற்று (19-02-2025)மாலை வழமைக்கு திரும்பியது.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் கீழ் இயங்கம் தும்பங்கேணி பிரதான நீர் வழங்கல் அலுவலகப் பிரிவின் தும்பங்கேணி  பிரதான வீதியில் உள்ள பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட நீர் கசிவு காரனமாக தடைப்பட்ட நீர் வினியோகமானது நேற்று(19-02-2025)ஆம் திகதி கனரக வாகன உதவியுடன்  காலை 10 மணிக்கு ஆரம்பமான வேலை பி.ப 3மணிக்கு நிறைவடைந்தன.




தும்பங்கேணி YAS  பிரிவு மக்களுக்கு தடைப்பட்ட நீர் வினியோகமானது இன்றிலிருந்து எந்தவிதமான தடையும் இன்றி வழமை போன்று நீர் வினியோகிக்கப்படுகின்றன.

பிரதான நீர் குழாய் நீர் கசிவு திருத்தவேலையானது போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதன் அவர்களின் பணிப்புக்கமைவாக சீர் செய்யப்பட்டன.

 திருத்த வேலையானது போரதீவுப்பற்று பிரதேசசபையின் நீர்வழங்களுக்கு பொறுப்பான தொழிநுட்ப உத்தியோகஸ்தர் பிரவீன் (மட்டக்களப்பு) மற்றும் நீர்வழங்களுக்கு பொறுப்பான உத்தியோகஸ்தர் ஆகியோர்களின் ஆலோசனைக்கு அமைவாக நீர்வழங்களுக்கு பொறுப்பான ஊழியர்களினால் திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





புதியது பழையவை