மீண்டும் எமது பிரதேசங்களில் மலேரியா காய்ச்சல் தொற்றும் ஆபத்து உள்ளமையினால் காய்ச்சல் இருப்பின் மலேரியா பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகும்.
அத்துடன் மலேரியா உள்ள நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்ள முன்னர் மலேரியா தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொண்டு செல்லுங்கள்.
இந்தியா, இந்தோனேசியா, மலேஷியா, பாகிஸ்தான், தாய்லாந்து, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா, பங்களாதேஷ், நைஜீரியா போன்ற நாடுகளுக்கு செல்லவிருந்தால் ஒரு வாரத்திற்கு முன்பு உமது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு மலேரியா தடுப்பு மாத்திரைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
இக் குறித்த நாடுகளில் இருந்து திரும்பியதும் உங்கள் பிரதேசங்களில் உள்ள வைத்திய சாலையில் அல்லது எமது ஆதார வைத்தியசாலையில் இலவசமாக குருதி பரிசோதனை மேற்கொண்டு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் எமது நாட்டையும் மலேரியா காய்ச்சலிருந்து காப்பாற்றுவோம்.
வருடம் ஒன்றிற்கு சுமார் 40 -50 மலேரியா நோயாளிகள் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பின் இனங்காணப்படுகின்றனர்
அவர்கள் உரிய காலத்தினுள் சிகிச்சை அளிக்கப்படுவதால் எமது நாட்டை பாதுகாத்து வருகின்றோம்.
மலேரியா தொடர்பான இவ் விழிப்புணர்வை நாமும் பகிர்வதோடு இதற்கான ஒத்துழைப்பையும் வழங்குவோம்.
நன்றி