பெற்றோர்களே அவதானம்!



அம்பாறை அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா கல்லூரி வீதியில் நேற்று(14-02-2025) சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வைத்திருந்த பையில் விசிறும் ஒருவகை மருந்து முகக்கவசங்கள் சொக்லட் டொபி போன்ற பொருட்கள் காணப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே அன்பார்ந்த பெற்றோர்களே முன்பின் தெரியாதவர்களிடம் உங்களது பிள்ளைகளை பேச வேண்டாம் எனவும் அவர்களிடம் இருந்து எதனையும் பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்துங்கள்.
அத்தோடு உங்களது பிள்ளைகளை மிகவும் அவதானத்துடன் கண்காணித்துக்கொள்ளுங்கள். 

அன்பார்ந்த இளைஞர்களே பொதுமக்களே சந்தேகத்திற்கிடமான இன்னும் சில நபர்கள் நம்பிரதேசத்தில் நடமாடுவதாக அறிய முடிகின்றது. அப்படி யாராவது அடையாளம் காணப்பட்டால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்குங்கள்.
புதியது பழையவை