நிரந்தர வைப்புச் சான்றிதழ் வழங்கலும் நூல் வெளியீடும்



வன்னி விழிப்புலனற்றறோர் சங்கத்தின் 13 உறுப்பினர்களுக்கான
நிலையான  வைப்புச்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும். இந்த அமைப்பின்  பழமரக்கன்றுகள் செயற்திட்டத்துக்கு நிதி உதவி வழங்கி வருகின்ற திரு. இ. தெய்வேந்திரன்  (குட்டி அண்ணன் - லண்டன்)அவர்களின் பழமரக்காடுகள் என்ற நூலின் வெளியீடும்  கடந்த (07 .02 .2025)ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றன.

சங்கத்தின் துணைத்தலைவர் 
திரு.கி. மகிந்தகுமார் நூல் வெளியீட்டு உரையினை நிகழ்த்த 
தலைவர்  அதனை வெளியிட்டு  வைத்தார்.  


பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்டச் 
செயலர் S . முரளிதரன் முதல் பிரதியினைப்  பெற்றுக்கொண்டதுடன் சிறப்புரையும் ஆற்றினார்.


சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட தாயக அன்னை திருமதி மங்கையற்கரசி கனகசபை  (லண்டன்) முதலானோர்  வழங்கி வைத்தனர்.


சங்கத் தலைவர் 
திருமதி யசோதா கிருஸ்ணகுமார்  அவர்களின் தலைமையில்  நடந்த
இந்நிகழ்வுகளைச் செயலர்  ஞானகுமார்  சிறப்பாக நெறிப்படுத்தினார்.
புதியது பழையவை