திருகோணமலை -நிலாவெளி பிரதேசத்தில் நேற்று (10-02-2025) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4.5 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயார் செய்யப்பட்ட 4 வலம்புரி சங்குகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை உதவிப் பணிப்பாளர் தென்னகோன், ஹொரவ்பொத்தானை தேசிய பூங்காவின் அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் ஆகியோர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (11-02-2025) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஒருவருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் சரீரப்பினையில் செல்வதற்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் இறக்க கண்டி பகுதிகளை சேர்ந்த 33,39, 45 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது
மேலும் மார்ச் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.