இதன்படி, காலி, மாத்தறை, களுத்துறை இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய , ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.