கொழும்பின் சில இடங்களில் மீண்டும் மின் தடை



கொழும்பின் சில பகுதிகளில் இன்றும் மின் தடை ஏற்பட்டுள்ளது. 

கொழும்பு 13 மற்றும் கல்கிஸ்ஸை உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.  

இதேவேளை, நேற்றையதினம் காலை 11.15 மணி முதல் மாலை வரை நாடளாவிய ரீதியில்  திடீர் மின் ஏற்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். 

இந்த நிலையில், எதிர்வரும் நாட்களிலும் கூட இவ்வாறு மின் தடை ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
புதியது பழையவை