யாழ்.மாவட்ட எம்.பி - க.இளங்குமரன் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்


நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் சாவகச்சேரி - தனக்கிளப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (15-02-2025) மாலை சம்பவித்துள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை