மாவையரின் வீட்டுக்கு பொலிஷ் காவலினுடன் சென்ற மட்டக்களப்பு எம் பி சாணக்கியனுக்கு முகத்துக்கு நேரே கேள்வி கேட்ட மாவையின் தம்பி.
கடந்த (2025,ஜனவரி,29), ல் மரணமான தமிழரசுகட்சி மூத்த தலைவர் அமரர் மாவை சேனாதிராசா வின் மாவிட்டபுரம் வீட்டுக்கு ஏழு நாட்கள் கடந்து (07-02-2025) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு எம் பி சாணக்கியனை வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் காங்கேசன் துறை பொலிசாரின் பாதுகாப்புடன் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்த மாவையரின் சகோதரர் தங்கராசா கடிந்து பேசியதுடன் சாணக்கியனிடம் உம்மால்தான் எனது அண்ணருக்கு இந்த நிலைமை வந்தது எனவும், வெட்கம் மானம் ரோசம் இருந்தால் என்ன முகத்துடன் இங்கு வந்தீர்?
எல்லாம் முடிந்து விட்டது என நினைக்கவேண்டாம் இனித்தான் ஆரம்பம் இருந்து பாரும் உங்களின் நடிப்புகளுக்கு நாங்கள் பாடம் கட்டுவோம் என பலத்த குரலில் பேசினார்.
சாணக்கியனும், சுகிர்தனும் மௌனமாக கேட்டடிருந்து சற்று நேரத்தில் திரும்பியதாகவும் மாவிட்டபுரம் தகவல்கள் தெரிவித்தன.
சாணக்கியனுடன் அவருடைய மெய்பாதுகாவலரும், அந்த வாகனத்தில் முன்னாள் மோட்டார் சைக்கிளில் இரண்டு றபிக் பொலிசாரும் சென்றுள்ளனர் எனவும் தெரிகிறது.