இம்முறை தனித்து உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழரசுக் கட்சி



இலங்கை தமிழரசுக்கட்சி இம்முறை தனித்தே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கூட்டம் நேற்று(08-03-2025) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற நிலையில், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.



எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை