மண்டூர் மற்றும் குருமண்வெளி இடையேயான நீர்வழி போக்குவரத்துக்காக புதிய பாதை ( இயந்திரப் படகு) சேவையில் ஈடுபடுத்துவதற்காக குருமண்வெளி இறங்கு துறைக்கு கொண்டு வரப்பட்டது.
இங்கு சேவையில் ஈடுபடுத்தப்படும் பழைய இயந்திரப் படகையும் இணைத்திருக்கிறோம்
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் பெரும் முயற்சியின் பிரதி பலனாக இப் புதிய இயந்திரப் படகு தருவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலத்தில் இப் பயணத்தின் போது அறவிடப்படும் பயணக் கட்டணம் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களினால் நிறுத்தப்பட்டு சேவை இலவசமாக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்ற அதே வேளை அதற்கான உறுதி மொழியையும் வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்படியே குருக்கள்மடம் அம்பிளாந்துறையிடையே நீண்ட காலமாக துருப்பிடித்த நிலையில் ஒட்டி ஒட்டி சேவையில் ஈடுபடுத்தப்படும் இயந்திரப் படகினையும் ( பாதை) மாற்றி தருமாறு கிராமவாசிகள் தெரிவிக்கின்றன.