கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் இணைந்தார் கருணா அம்மான்



கிழக்கு அரசியலில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனோடு இணைந்து செயற்படும் வகையில் இன்று (22-03-2025)காலை மட்டு றிவோரா ஹோட்டலில் வைத்து கிழக்குத் தமிழர் கூட்டமைப்புடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு  இணைந்து கொண்டார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்  கருணா அம்மான் அவர்கள் இணைந்தார்.


இரு துருவங்களாக இருந்த இருவரது இணைவை தொடர்ந்து நீண்ட நாட்களாக  எதிர்பார்த்த ஒரு விடயம் இன்று நிறைவேறியிருப்பதை அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குவதற்காக புதிய வியூகங்களை அமைத்துவரும் கௌரவ பிள்ளையான்  ‘கிழக்கு தமிழர் கூட்டமைப்பு’ எனும் கூட்டமைப்பை உருவாக்கி அதில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகத்தினரும் இடையிலான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கடந்த 15ஆம் திகதி சைச்சாத்திட்டிருந்தமை அண்மைக்காலத்தில் பேசு பொருளிகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இக் கூட்டமைப்பு நடக்க இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் இணைந்து களமிறங்கவுள்ளனர்.
புதியது பழையவை