இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் இடையில் இடம்பெற்ற ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறும் வட்டாரங்களில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு.
கிழக்கு மாகாணத்தின்
மூதூர் பிரதேச சபை - தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உப தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி
கோறளைப்பற்று பிரதேச சபையில் (வாழைச்சேனை) ஆகியவற்றில் தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், உப தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி
கல்முனை மாநகர சபையில் மேயர் பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் துணை மேயர் இலங்கை தமிழரசுக் கட்சி,
நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி, உப தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உப தவிசாளர் - இலங்கை தமிழரசுக் கட்சி
மேற்குறித்த ஒழுங்கு முறையில் பதவிகளை பகிர்ந்து கொள்வது உண உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.