கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவுக்கும், புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(07-03-2025) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கை குறித்தும், மூவின மக்கள் வாழும் இந்த மாகாணத்தில் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பது தொடர்பிலும் மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் அருள்ராஜ் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.