காத்தான்குடி மட்/மம/மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பெண்கள் பாடசாலையில் இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் குழந்தையை சேர்க்க விண்ணப்பித்த தாயிடம் பாடசாலை அதிபர் மன்சூர் மௌலவி பாலியல் லஞ்சம் கேட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
குறித்த குழந்தையின் பாதிக்கப்பட்ட பெற்றோர் கூறுகையில்,
"நான் மட்/மம/மீரா பாலிகா மகா வித்யாலய பெண்கள் தேசிய பாடசாலையில் சாதாரண தரம் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்தரம் வரை படித்த பழைய மாணவி.,
நான் பாடசாலைக்கு பல்வேறு பங்களிப்புகளை செய்துள்ளேன்.,
அதன் அடிப்படையில் எனது இரண்டாவது பிள்ளையை (6.2 - 6.3) வகைப்படுத்தல் பட்டியலின் கீழ் இந்த ஆண்டு தரம் ஒன்றில் சேர்க்க விண்ணப்பித்திருந்தேன்.,
பாடசாலை நிர்வாகம் நிர்ணயித்த மதிப்பெண்ணை விடக் குறைவான மதிப்பெண்களை வழங்கி என் குழந்தையை நிராகரித்துள்ளது.
ஆனால் எனது பகுதியில் உள்ள வேறு குழந்தைகளையும் வேறு பகுதிகளில் உள்ள குழந்தைகளையும் சேர்த்துள்ளனர்.
எனவே நான் பாடசாலைக்குச் சென்று அது தொடர்பாக அதிபரிடம் பேசியபோது, பாடசாலையின் அதிபர் இரட்டை அர்த்தங்களுடனும் முகஸ்துதியுடனும் என்னிடம் பேசினார்.
நான் இணங்கினால், என் குழந்தையைச் சேர்ப்பது பற்றி யோசிக்கலாம் என்று கூறி எனது வாட்ஸ்அப் எண்ணைக் கேட்டார்.
இதை நான் வெளியில் சொன்னால் ஏற்கனவே பாடசாலையில் படிக்கும் உங்கள் மற்றொரு குழந்தையின் கல்வி அழிந்துவிடும் என்று அவர் என்னை மிரட்டினார்.
இந்த விஷயம் பாடசாலையில் படிக்கும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் பரபரப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெற்றோர் மேலும் கூறுகையில்,
பாடசாலை அதிபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்தவர்.
அவர் ஏற்கனவே மூன்று திருமணங்களை முடித்துவிட்டு சமீபத்தில் நான்காவது திருமணத்தை முடித்துள்ளார்.
பெரும்பாலும் இரவில் பாடசாலையில் தங்குவார்.
2021ஆம் ஆண்டு அரசியல் பின்னணியில் பாடசாலைக்கு வந்தவர்.
அங்குள்ள பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை மேம்பாட்டுக் குழுக்கள் இதையெல்லாம் அறிந்திருந்தும் அதை வெளியே கொண்டு வந்தால் பாடசாலையின் பெயர் கெட்டுவிடும், வருமானம் குறைந்துவிடும் என்பதால் அவர்கள் அதை மூடிமறைப்பதாகவும் அவர்கள் கூறினர்.
எனவே காத்தான்குடியில் உள்ள சிவில் அமைப்புகள் பெண்கள் பாடசாலையின் தலைமை ஆசிரியராக இருக்கும் அத்தகைய நபரை விசாரித்து அங்கு படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.