பிரான்சில் மருத்துவத்துறை கருவி உருவாக்கத்தில் வெற்றியீட்டிய ஈழத்தமிழ்மகன் !


(சுதன்ராஜ்)

பிரான்சில் இடம்பெற்ற துறைசார் கருவி உருவாக்குனர்களுக்கான தேர்வில், மக்களின் தேவைக்குரிய கருவி எனும் நோக்கில் சுஜீவன் முருகானந்தம் எனும் புலம்பெயர் ஈழத்தமிழ்மகன் உருவாக்கிய மருத்துவத்துறை கருவியானது தேர்வுக்கு உள்ளாகிவெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளான சிறார்களுக்கான மருத்துவக் கருவியாக இது அமைந்துள்ளது.




கடந்த மார்ச் 18ம் நாள் செவ்வாய்க்கிழமை பிரான்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடளாவியரீதியில் பல்வேறு துறைசார்ந்த 81 பேர் பலவகையான கருவிகளை உருவாக்கியிருந்தனர், இவர்களில் 6 பேர் இறுதித்தேர்வாகியிருந்த நிலையில் சுஜீவன் முருகானந்தம் அவர்கள் உருவாக்கிய கருவி மக்களின் விருப்பு வாக்குகளால் வெற்றியினை எட்டியுள்ளது.

இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்கருவியானது, சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை, உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு, ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டாதகவும் உருவாக்கம் பெற்றுள்ளது.

தமிழர் தாயகத்தில் இருந்து 7வயதில் பிரான்சுக்கு வந்து படிமுறை படிமுறையாக கல்வியினைக்கற்று, இத்துறையில் சாதனையினை செய்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
புதியது பழையவை