மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்குள் உள்ள சாட்சியங்களை சேகரிக்கும் அனைத்து வழிமுறைகளை நிராகரிப்பதாக, இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது,
இது, உயர்ஸ்தானிகரகத்தின் பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றின் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு முரணானது என்றும், இலங்கை கூறியுள்ளது.
இந்தநிலையில், சம்பந்தப்பட்ட நாட்டின் சம்மதம் இல்லாத, நாடு சார்ந்த தீர்மானங்களுக்கு எதிராக இலங்கை தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஹிமாலி அருணதிலக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 46/1, 51/1, மற்றும் 57/1 தீர்மானங்களையும், இந்த பிளவுபடுத்தும் மற்றும் ஊடுருவும் தீர்மானங்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட இலங்கை மீதான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும், தாம் மீண்டும் நிராகரிப்பதாக அவர் கூறியுள்ளார்.
எந்தவொரு இறையாண்மை கொண்ட அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் உறுதிப்பாட்டை முன்கூட்டியே தீர்மானிக்கும் ஒரு வெளிப்புற பொறிமுறையை மிகைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம், பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும், பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்தி, ஏற்படும் பலன்களை சமூகத்தின் அனைத்து அடுக்குகளும் நியாயமாகப் பெற அனுமதிக்கும் வகையில் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அருணதிலக கூறியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) ஆகியவற்றின் பணிகள் குறித்தும், அவர், பேரவையில் விளக்கமளித்துள்ளார்.