சுற்றுலாப் பயணி ஒருவரிடம் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒஸ்ரிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரிடம் அதிகாரிகள் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த வெளிநாட்டுப் பெண் வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, சந்தேகநபர்களான பொலிஸ் அதிகாரிகள் 50,000 ரூபாய் லஞ்சம் கோரியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.