மட்டக்களப்பின் பிரபல சட்டத்தரணி பிரேம்நாத் அவர்கள் நபர் ஒருவரிடம்,வழக்கொன்றை தாக்கல் செய்வதற்காக 24000/-இனை பெற்றுக்கொண்டு,வழக்கை தாக்கல் செய்யாது ஏமாற்றியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார.
கடந்த வருடம் அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,ஆறு மாதங்கள் பிறேம்நாத் அவர்கள் எந்தவொரு நீதிமன்றங்களிலும் வழக்காட முடியாதென தடைவிதித்த்துடன் குறித்த வழக்கை இவ்வருடம் மீள விசாரிப்பதற்காக திகதியிட்டிருந்தது.
அதன்படி நேற்றய தினம் (12.03.2025)ஆம் திகதி விசாரணைக்கு வந்த அந்த வழக்கில், மேலும் இரண்டுமாதங்கள் குறித்த சட்டத்தரணி பிறேம்நாத் அவர்கள் நீதிமன்றங்களில் வழக்காடமுடியாதபடிக்கு தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மீளவும் குறித்த வழக்கானது எதிர்வரும் வைகாசி மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.
சட்டத்தை தன்பாட்டுக்கு வளைத்த சட்டத்தரணியை சட்டம் எவ்வாறு வளைக்கிறது என்பதை அறிய ஆவலாய் இருப்போம்.